மீண்டும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா?


மீண்டும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா?
x
தினத்தந்தி 6 Jun 2022 4:01 PM IST (Updated: 13 April 2025 7:49 AM IST)
t-max-icont-min-icon

புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யும், சமந்தாவும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. விஜய் தற்போது தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது விஜய்க்கு 67-வது படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சமந்தாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் குஷி தெலுங்கு படத்தில் சமந்தா நடித்து வருகிறார். சாகுந்தலம் புராண படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் வருகிறார். இதுவும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story