தயாரிப்பாளரான சமந்தா...ரிலீசுக்கு தயாரான முதல் படம்


Samantha’s Tralala’s first film is ready for releaseTelugu movie tickets
x

சமந்தா சமீபத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் சமந்தா, சமீபத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் கீழ் சமந்தா "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளதாக சமந்தா தெரிவித்திருக்கிறார். சமந்தா தயாரித்த முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story