ஹாலிவுட் படத்தால் ஈர்க்கப்பட்ட ஐஸ்வர்யா லட்சுமியின் "சம்பரலா"

இப்படத்தில் ஜெகபதி பாபு, அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சென்னை,
நடிகர் சாய் துர்கா தேஜ் ஒரு வருடத்திற்கும் மேலாக "சம்பரலா எட்டி கட்டு" என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
‘அனுமான்’ பட புகழ் நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு, அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகர் சாய் துர்கா தேஜ் இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தால் ஈர்க்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். " '300' என்ற ஹாலிவுட் படத்தால் ஈர்க்கப்பட்டது என்றும் அதிரடி சண்டைக்காட்சிகள் அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story






