அர்ஜுன் ரெட்டியில் சாய் பல்லவியை நடிக்க வைக்க விரும்பிய சந்தீப் ரெட்டி


Sandeep Reddy reveals he wanted to cast Sai Pallavi in Arjun Reddy
x

நேற்று நடந்த தண்டேல்.படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சந்தீப் ரெட்டி கலந்துகொண்டார்.

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தண்டேல். நாக சைதன்யாவின் கெரியரில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நேற்று நடந்த இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க விரும்பியதாக கூறினார்.

மேலும், 'வாய்ப்புகளுக்காக காலப்போக்கில் ஹீரோயின்கள் ஆடை அணியும் விதத்தை மாற்றுவார்கள். ஆனால் சாய் பல்லவி சற்றும் மாறாமல் இருப்பது அருமை. உண்மையில் இது மிகவும் அருமை' என்றார்.


1 More update

Next Story