'ஸ்பிரிட்' - பிரபாஸிடம் இயக்குனர் வைத்த கோரிக்கை

பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.
சென்னை,
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் 'ஸ்பிரிட்' படம் பிரபாஸின் 25-வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். பிரபாஸுக்கு வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பது போன்று உருவாக்கி இருக்கிறாராம். இதனால் தொடர்ந்து அதே தோற்றத்தை மெயின்டைன் செய்தால் மட்டுமே படத்தில் அவரது தோற்ற வித்தியாசம் இல்லாமல் படமாக்க முடியும் என்பதால் ஸ்பிரிட் படத்திற்காக மொத்தமாக தேதிகளை ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.






