’அது எனக்கு முழுமையான உணர்வை கொடுத்தது’ - நடிகை மிர்னா

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து இருந்தவர் மிர்னா மேனன்
சென்னை,
கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் 'பட்டதாரி' எனும் படத்தின் மூலம் 2016ல் சினிமாவில் அறிமுகமானார். 'பட்டதாரி' படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. 'ஜெயிலர்' படத்தில் ரஜினி மருமகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
மேலும், `களவாணி மாப்பிள்ளை', `புர்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான `பர்த் மார்க்' படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில், மிர்னா பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சேலை தனக்கு முழுமையான உணர்வை அளிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது மிர்னா மேனன் "டான் போஸ்கோ" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிர்னா மேனன் கல்லூரி ஆசிரியை சுமதியாக நடிக்கிறார். இப்படத்தை ஷங்கர் கவுரி இயக்குகிறார். மேலும் கதாநாயகனாக ருஷ்யா நடிக்கிறார்.






