சசிகுமாரின் "பீரிடம்" 2வது பாடல் அப்டேட்

சசிகுமார் நடித்துள்ள 'பிரீடம்' திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளது.
சசிகுமாரின் "பீரிடம்" 2வது பாடல் அப்டேட்
Published on

சென்னை,

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி தொடர்ந்து சசிகுமார் பீரிடம் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை சத்யசிவா இயக்குகிறார்.

இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் 2வது பாடல் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com