ஆனந்தியின் ’பிரேமண்டே’...ஸ்ரேயா கோஷல் குரலில் புதிய பாடல் வெளியீடு


Second Single from Premante - PelliShuru out now!
x

இப்பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.

சென்னை,

நடிகை ஆனந்தி 'பிரேமண்டே' என்ற புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிறார். தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார்.

காதல் மற்றும் நகைச்சுவை படமாக இருக்கும் இதனை ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றநிலையில், தற்போது அப்படத்திலிருந்து 2-வது பாடல் வெளியாகி இருக்கிறது. ’பெல்லி சுரு’ எனத்துவங்கும் இப்பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் தீபக் புளூ ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story