"புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2" அப்டேட் கொடுத்த செல்வராகவன்

ஆர்யன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் செல்வராகவன் கலந்து கொண்டார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் "காதல் கொண்டேன்" என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பிறகு, '7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம்' போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். குறிப்பாக புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தன. அதனை தொடர்ந்து செல்வராகவன் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். தற்போது ஆர்யன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட செல்வராகவன் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களுக்கான அப்டேட்டை கொடுத்தார். அதாவது, ""புதுப்பேட்டை -2 படத்திற்கான கதையை 50 சதவீதம் எழுதிவிட்டேன். 'ஆயிரத்தில் ஒருவன்-2' படத்தின் கதையையும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்!" என்று கூறியுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் இந்த படங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






