பாலியல் அத்துமீறல்கள்: மோசமான அனுபவத்தை பகிர்ந்த நடிகை டோலிசிங்

நடிகை டோலி சிங் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டோலிசிங். இவர் டெல்லியில் அவர் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். டெல்லியில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நான் சென்ற பஸ் அரசு பள்ளி வழியாக சென்றது. டெல்லியில் ஒரு இளம்பெண்ணாக என் வாழ்க்கை பயத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனேயே கழிந்தது. பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் பேருந்தில் ஏறி பெண்கள் மீது கற்களை வீசுவது, ஆபாசமாக பேசுவது என தொடர்ந்து துன்புறுத்துவார்கள்.
மலைப்பகுதியில் பாதுகாப்பான சூழலில் வளர்ந்த எனக்கு டெல்லியில் சந்தித்த பாதுகாப்பற்ற உணர்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டோலிசிங் ஏற்கனவே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஒரு இயக்குனர் நட்சத்திர விடுதிக்கு அழைத்தார் என கூறியிருந்தார்.
மேலும் இன்னொரு சம்பவம் பற்றி கூறுகையில், ‘ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த நபர் என்னிடம் அத்து மீறினார். அவரைக் கண்டு பயந்து ஓடாமல் நான் அவரை முடியை பிடித்து இழுத்து அவருடன் சண்டையிட்டு போலீசில் புகார் அளித்தேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் டோலிசிங்.






