'ராக் ஸ்டார்' என அழைத்த ஷாருக்கான்...ஜான் சீனா கொடுத்த ரியாக்சன்

ஜான் சினா தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய நடிகர் ஷாருக் கானை பற்றி பதிவிட்டு இருக்கிறார்.
சென்னை,
மல்யுத்த வீரராக உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜான் சினா. ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகவும் இருக்கும் அவருக்கு இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஜான் சினா எக்ஸ் பக்கத்தில் இந்திய நடிகர் ஷாருக் கானை பற்றி பதிவிட்டு இருக்கிறார்.
எக்ஸ் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் ஜான் சீனா பற்றி கேட்டதற்கு அவர், " மல்யுத்த ஜாம்பவான் ஜான் சினா மிகவும் பணிவானவர் மற்றும் கனிவானவர்" என்று வர்ணித்து, அவரை "ராக் ஸ்டார்" என்று அழைத்தார்.
அந்த பதிவுக்கு ரியாக்ட் செய்த ஜான் சினா "உங்கள் கருணையையும் உரையாடலையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் உலகெங்கிலும் உள்ள உங்கள் ரசிகர்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்ததற்கு நன்றி" என குறிப்பிட்டு இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






