"43 வயதிலும் குறையாத அழகு"- ரகசியத்தை பகிர்ந்த நடிகை ஸ்ரேயா!


43 வயதிலும் குறையாத அழகு- ரகசியத்தை பகிர்ந்த நடிகை ஸ்ரேயா!
x

‘43 வயதிலும் அழகு குறையாமல் வலம் வருவது எப்படி?' என்று நடிகை ஸ்ரேயாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த ஸ்ரேயா சரண், வளைவு நெளிவான நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் படங்கள் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் மும்முரமாக படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ' படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டும் கலக்கினார். தொடர்ந்து படங்களில் கவர்ச்சி நடனம் ஆடவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் ‘43 வயதிலும் அழகு குறையாமல் வலம் வருவது எப்படி?' என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு “உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டை தாண்டி நல்லவற்றை கேட்க வேண்டும், நல்லவற்றை பார்க்க வேண்டும், நல்லவற்றையே செய்ய வேண்டும். இதன் மூலம் அழகு நம்மிடையே தங்கும்” என்று சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.

1 More update

Next Story