வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ஷிவானி?


Shivani acting in biopic?
x

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கிறார்.

சென்னை,

நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு துறையில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகிறது. அந்த வகையில் எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கிறார்.

இப்படத்திற்கு 'ஜி.டி.என்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், யோகி பாபு, ஜெயராம், பிரியாமணி ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது குறித்து எதுவும் தெரியாதநிலையில், ஜூன் மாதம் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story