ஜூனில் தொடங்கும் தனுஷின் 55வது படத்தின் படப்பிடிப்பு?


Shooting for Dhanushs 55th film to begin in June
x
தினத்தந்தி 14 March 2025 9:34 AM IST (Updated: 18 March 2025 9:37 PM IST)
t-max-icont-min-icon

தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், "தேரே இஸ்க் மெய்ன்" என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தை `கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமரன் படத்தை போலவே இந்த படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story