துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' படத்தில் இணைந்த தமிழ் நடிகர்கள்


Shooting for Dulquer Salmaan’s ‘I’m Game’ begins
x
தினத்தந்தி 4 May 2025 7:07 AM IST (Updated: 4 May 2025 7:21 AM IST)
t-max-icont-min-icon

'ஐ அம் கேம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார்.

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், "சீதா ராமம்", 'லக்கி பாஸ்கர்' படங்களின் வெற்றியை தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் 'காந்தா' படத்தில் நடித்து வருகிறார்.

பாக்யஸ்ரீ போர்ஸ் காதாநாயகியாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், துல்கர் சல்மான் மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

'ஐ அம் கேம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் தமிழ் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின், கதிர் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிக்கின்றனர். முதல்முறையாக துல்கர் சல்மானுடன் மிஷ்கின் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன்றன.

1 More update

Next Story