சிறு பட தயாரிப்பாளர்கள் தான் திரையுலகை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள் - ஜாவா சுந்தரேசன்


சிறு பட தயாரிப்பாளர்கள் தான் திரையுலகை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள் - ஜாவா சுந்தரேசன்
x

நல்ல காலம் தொடங்கிவிட்டதாக உணருகிறேன் என்று ஜாவா சுந்தரேசன் கூறியுள்ளார்.

சென்னை

கே.பி.தனசேகர், பூங்கா ராமு லட்சுமி, கீதாஞ்சலி தயாரித்து கே.பி.தனசேகர் இயக்கத்தில் கவுசிக், ஆரா, சசிதயா, பிரணா ஆகியோர் நடித்துள்ள ‘பூங்கா' படம் விரைவில் திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜாவா சுந்தரேசன், "வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கட்டுமே என்று தான் சாம்ஸ் என்ற பெயரை ‘ஜாவா சுந்தரேசன்' என்று என் பெயரை மாற்றினேன். நல்ல காலம் தொடங்கிவிட்டதாகவே உணருகிறேன்.

சிறு பட தயாரிப்பாளர்கள் தான் இன்றைக்கு திரையுலகையே வாழவைத்து கொண்டிருக்கிறார்கள். கடனை வாங்கி, சொத்தை விற்று படம் எடுக்கிறார்கள். ஒருவருடத்துக்கு 15 பெரிய படங்கள் தான் திரைக்கு வருகின்றன. மற்றபடி சிறு பட்ஜெட் படங்கள் தான் சினிமாவை ஆள்கின்றன. அவர்கள் தான் உண்மையிலேயே வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் சினிமாவும் வாழும்.

எப்போதுமே கடின உழைப்பை கொடுக்கும்போது படம் வெற்றிபெறும். எனவே கலைஞர்கள் அத்தனை பேரும் கடினமாக உழைக்க வேண்டும்" என்று கூறினார்.

1 More update

Next Story