“சிறை” படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு


“சிறை” படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு
x

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படம் நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

சென்னை.

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக திரையரங்குகளில் வெளியானது. இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியது. சாதாரண காதல் கதையைக் கிளைமேக்ஸில் பரபரப்பாகச் சொல்லி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்று வெற்றியும் பெற்றனர்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார்.‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது. ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது. இப்படம் 25 நாட்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘சிறை’ படம் உலகளவில் ரூ. 31.58 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 27.27 கோடியையையும் கேரளத்தில் 30 லட்சத்தையும் கர்நாடகத்தில் ரூ.1.05 கோடியையும் வெளிநாடுகளில் ரூ. 2.95 கோடியையும் இப்படம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story