அந்த அர்த்தத்தில் பேசவில்லை...பெண்களை பற்றிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நடிகர்


Sivaji apologizes for using ‘unparliamentary words’
x
தினத்தந்தி 24 Dec 2025 3:41 PM IST (Updated: 24 Dec 2025 3:59 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் ஆடை அணிவது குறித்து நடிகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி "தண்டோரா" பட நிகழ்வில், பெண்கள் ஆடை அணிவது குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த சர்ச்சை கருத்துக்களுக்கு நடிகர் மன்னிப்பு கோரியுள்ளார் .

மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது கருத்துகள் எல்லா பெண்களையும் பற்றியது அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார். கதாநாயகிகள் வெளியே செல்லும்போது முழு ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்ற அர்த்தத்தில் தான் பேசியதாகவும் கூறினார்.

யாரையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் திரைப்படத் துறையில் உள்ள பெண்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருந்தால், இது தவறு என்று எந்த பெண்ணும் நினைத்திருந்தால் அதற்காக தான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் சிவாஜி கூறினார்.

1 More update

Next Story