“பராசக்தி” படத்தின் டப்பிங் பணியில் சிவகார்த்திகேயன்


“பராசக்தி” படத்தின் டப்பிங் பணியில் சிவகார்த்திகேயன்
x

சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகை ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நிறைவு செய்துள்ளனர். தமிழில் நடிகை ஸ்ரீலீலா எவ்வாறு வசனங்களை பேசி இருக்கிறார் என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கி இருக்கிறார். இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story