"ஹவுஸ் மேட்ஸ்" படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்


ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்
x

தர்ஷன் நடித்துள்ள “ஹவுஸ் மேட்ஸ்” பேண்டஸி ஹாரர் காமெடி படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வெளியிட உள்ளது.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் புரோடக்ஷன்ஸ் சார்பாக வாழ் , குரங்கு பெடல் , கொட்டுக்காளி , கனா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மற்றொரு படம் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

பேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் "ஹவுஸ் மேட்ஸ்".கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.ராஜவேல் எழுதி , இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி, பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.

"ஹவுஸ் மேட்ஸ்" படத்தை பார்த்ததாகவும் படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் தனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் இந்த படத்தை வழங்குவதாக சிவகார்த்திகேயன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தர்ஷன் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தும்பா படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அஜித்தின் துணிவு, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

1 More update

Next Story