சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ''பராசக்தி'' படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ''பராசக்தி'' படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது.
விஜய்யின் ஜனநாயகன் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது.
Related Tags :
Next Story






