நானியின் 'கோர்ட்'- சிறிய படம், பெரிய வெற்றி: 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?


Small Film, Big Hit: Nani’s Court hits Rs.50 cr
x
தினத்தந்தி 26 March 2025 7:28 AM IST (Updated: 1 April 2025 10:45 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் நானி தயாரித்த படம் 'கோர்ட்'

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது தயாரித்துள்ள படம் 'கோர்ட்' . நடிகர் நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் உருவான 'கோர்ட்' படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.15.90 கோடி வசூலை குவித்துள்ளது.

தற்போது 10 நாட்களை கடந்துள்ளநிலையில், 'கோர்ட்' படத்தின் வசூலை தயாரிப்பு நிறுவனமான வால் போஸ்டர் சினிமா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதன்படி, இப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை பெற்று அசத்தியுள்ளது. மேலும், இப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லின் டாலர் வசூலித்திருக்கிறது.

1 More update

Next Story