6 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட படத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்


South Indian actress Priyanka Mohan to star in Kannada spy drama 666 Operation Dream Theatre
x

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா மோகன்.

சென்னை,

பிரியங்கா மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னட ஸ்பை திரில்லரான ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’படத்தின் தயாரிப்பாளர்கள் பிரியங்கா மோகன் இதில் நடிப்பதாக அறிவித்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகை பிரியங்கா மோகன், ஹேமந்த் எம் ராவ் இயக்கும் ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ தியேட்டர்’படத்தில் சிவராஜ்குமார் மற்றும் டாலி தனஞ்சயாவுடன் நடிக்கவுள்ளார் .

பிரியங்கா கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான 'ஓந்த் கதே ஹெல்லா' மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அவர் தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களான தனுஷ் ,பவன் கல்யாண் , நானி, சிவ கார்த்திகேயன் போன்றோருடன் நடித்தார்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரியங்கா மோகன் நடிக்கும் கன்னட படம் இதுவாகும். தற்போது தயாரிப்பில் உள்ள 666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர் படப்பிடிப்பில் டிசம்பர் முதல் வாரத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story