"அவமானப்படுத்திய தென்னிந்திய நடன இயக்குனர்.." - ஓபனாக பேசிய பிரபல நடிகை


South indian choreographer who insulted me famous actress openly exposed
x

பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை நடிகை இஷா கோபிகர் பகிர்ந்தார்.

சென்னை,

தென்னந்திய நடன இயக்குனர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக நடிகை இஷா கோபிகர் கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இஷா கோபிகர், இது பாலிவுட்டில் தான் நுழைவதற்கு முன்பு நடந்த சம்பவம் என்றும், படப்பிடிப்பில், அந்த நடன இயக்குனர் எல்லோர் முன்னிலையிலும் தன்னிடம், இந்த பெண்கள் பாலிவுட்டிலிருந்து வருகிறார்கள், ஏன் இவர்களை அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை, இவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நடனமாட தெரியவில்லை என்றால், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டதாகவும், தனக்கு அது மிகவும் அவமானமாக இருந்ததாகவும் இஷா கோபிகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story