குட்டி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ''ஸ்பைடர் மேன்''... - வீடியோ வைரல்

''ஸ்பைடர் மேன்'' படங்களில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் டாம் ஹாலண்ட்.
சென்னை,
படப்பிடிப்பின்போது குட்டி ரசிகர் ஒருவருடன் ''ஸ்பைடர் மேன்'' பட நடிகர் டாம் ஹாலண்ட் புகைப்படம் எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
''ஸ்பைடர் மேன்'' படங்களில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் டாம் ஹாலண்ட். இவர் தற்போது ஸ்பைடர் மேன் படத்தின் 4-வது பாகத்தில் நடித்து வருகிறார். இதற்கு 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் துவங்கி இருக்கிறது.
படப்பிடிப்பை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடி இருந்தனர். அப்போது ஒரு குட்டி ரசிகருடன் டாம் ஹாலண்ட் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story






