ஒரே நேரத்தில் பல மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா

'புஷ்பா-2' படத்தில் நடனமாடி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தார் ஸ்ரீலீலா.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. 23 வயதாகும் ஸ்ரீலீலா 'புஷ்பா-2' படத்தில் போட்ட குத்தாட்டம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. அதையடுத்து இவருக்கு பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி, தற்போது இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதேபோல், தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
தெலுங்கில் ரவி தேஜாவுடன் 'மாஸ் ஜாதரா' மற்றும் அகினேனி அகிலுடன் 'லெனின்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு ஒரே நேரத்தில் பல மொழி படங்களில் நடித்து வருவதால் பான் இந்தியா அளவில், 'சென்சேஷனல்' நடிகையாக ஸ்ரீலீலா மாறி இருக்கிறார்.
Related Tags :
Next Story






