’அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுத்தது’ - ஸ்ரீலீலா


Sreeleela shared that working with Ravi Teja was a joyful experience
x

ஸ்ரீலீலா நடித்துள்ள மாஸ் ஜதாரா படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சென்னை,

நடிகை ஸ்ரீலீலா தற்போது தெலுங்கில் மாஸ் ஜதாரா படத்தில் நடித்திருக்கிறார். ரவி தேஜா நடிப்பில், பானு போகவரபு இயக்கியுள்ள இந்தப் படம், முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது.

இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது படக்குழு புரமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதில் பேசிய ஸ்ரீலீலா, ரவி தேஜாவுடன் பணிபுரிவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் என்று கூறினார்.

மேலும், பணிபுரிய எளிதான மற்றும் மிகவும் வேடிக்கையான சக நடிகர்களில் ரவி தேஜா ஒருவர் என்றும் கூறினார். இப்படத்தில் ஸ்ரீலீலா ஒரு அறிவியல் ஆசிரியராகவும், கிராமத்துப் பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.

1 More update

Next Story