ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம்...ஹீரோ இவரா?

சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகிறார்.
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீலீலா கடைசியாக ''ஜூனியர்'' படத்தில் நடித்திருந்தார். அதில், இடம்பெற்ற ''வைரல் வையாரி'' பாடலில் தனது நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
ஸ்ரீலீலா இந்த ஆண்டு கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, ஸ்ரீலீலா அடுத்ததாக தமிழில் அஜித்தின் 64-வது படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய கேங்ஸ்டர் ஆக்சன் படமான ''குட் பேட் அக்லி''-ல் நடித்திருந்தார். ஆதிக்கின் பணி பாணியால் ஈர்க்கப்பட்ட அஜித், தனது 64வது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கே வழங்கி இருக்கிறார்.
இப்படத்திற்கான தயாரிப்புக்கு முந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிப்பாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் என்றும் அனிருத் இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






