தெருநாய்கள் சர்ச்சை - மன்னிப்பு கேட்ட நடிகர் படவா கோபி

தனது பேச்சுக்கு எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து படவா கோபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
சென்னை:
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில், தெருநாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடத்தப்பட்ட விவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் கலந்துகொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நடிகர் படவா கோபியின் கருத்துகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அவர் அதற்கு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது பேச்சுக்கு எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து படவா கோபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:-
'' நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.






