'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு' படத்தின் மூலம் நடிகராகும் சுப.வீரபாண்டியன்


Subha Veerapandian to make his acting debut with LakshmikanthanKolaiVazhakku
x

'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுப.வீரபாண்டியன் நடிக்கிறார்.

சென்னை,

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக் கதைகளால் பெரிதும் பாராட்டைப் பெற்ற, இயக்குநர் தயாள் பத்மநாபன் உருவாக்கி வரும் 'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு' படத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் நடிகராக இணைந்துள்ளார்

`அனகனகா ஒ அதிதி', தமிழில் `கொன்றால் பாவம்', `மாருதிநகர் காவல்நிலையம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் இணைந்துள்ளார்.

1 More update

Next Story