25 ஆண்டுகள் நட்பு.. அனுராக் உடனான நினைவுகளைப் பகிர்ந்த சுதா கொங்கரா

அனுராக் காஷ்யப், எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் என்று இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளார்.
25 ஆண்டுகள் நட்பு.. அனுராக் உடனான நினைவுகளைப் பகிர்ந்த சுதா கொங்கரா
Published on

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். விஜய்யின் 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரைபில் கிளப்' படத்திலும் நடித்துள்ளார். வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது இயக்கம் மற்றும் திரைக்கதைக்கென 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

சுதா கொங்கர பிரசாத் 2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். மாதவன் நடித்த "இறுதிச்சுற்று" திரைப்படத்தினை 2016ல் இயக்கியுள்ளார். 2020ம் ஆண்டில், 'சூரரைப் போற்று' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும்பராசக்தி படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அனுராக் காஷ்யப் உடனான நட்பு குறித்து இயக்குநர் சுதா கொங்காரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், நாம் கடைசியாக சந்தித்து 15 ஆண்டுகள் ஆகின்றன அனுராக் காஷ்யப். எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் - இயக்குநர். நாம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திந்துக்கொண்ட முதல்நாள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. மணி சாருக்கும் உங்களுக்கு இடையில் மொழி பெயர்ப்பதில் ஒரு பாலமாக இருந்தேன். நீங்கள் மூன்று மணி நேரத்திலேயே என்னை டீக்கோட் செய்துவிட்டீர்கள். இருளைச் சார்ந்தவர் நீங்கள்; சூரிய ஒளியைப் போன்றவர் நான், எப்போது காதல் கதை எழுதி எனக்குத் தரப் போகிறீர்கள் மிஸ்டர்? எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com