''அழகுக்காக அறுவை சிகிச்சையா ?'' - பிரபல நடிகை விளக்கம்


Surgery for beauty? - Famous actress explains
x
தினத்தந்தி 12 Jun 2025 5:30 AM IST (Updated: 12 Jun 2025 5:30 AM IST)
t-max-icont-min-icon

''காதல் கண் கட்டுதே'' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி

சென்னை,

2017-ம் ஆண்டு வெளியான ''காதல் கண் கட்டுதே'' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள், அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது இவர் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்பட விழாவில் நடிகை அதுல்யா ரவி கலந்துகொண்டார். அப்போது அவரிடம், 'அழகுக்காக நீங்கள் முகத்தில் அறுவை சிகிச்சை செய்ததாக ஒரு செய்தி உலா வருகிறதே அது உண்மையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், ''அப்படியெல்லாம் இல்லை. அப்படி எந்த சிகிச்சையும் நான் செய்யவில்லை. ஏன் இதுபோல வதந்திகள் வருகிறது என்று தெரியவில்லை'', என்றார்.

1 More update

Next Story