நாகார்ஜுனா 100...இணைந்த பிரபல நடிகை

இந்த படத்தில் மூன்று நடிகைகள் நடிப்பதாக தெரிகிறது.
Sushmitha Bhat joins the cast of King 100
Published on

 சென்னை,

நாகார்ஜுனா தற்போது தனது 100வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் மூன்று நடிகைகள் நடிப்பதாக தெரிகிறது. தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று முன்னதாக தகவல் வெளியானது. இப்போது, சுஷ்மிதா பட் கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் முன்பு லவ் மேரேஜ் படத்தில் நடித்திருந்தார்.

நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த மைல்கல் படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com