’கல்லறைக்குச் சென்றால் மன அமைதி கிடைக்கும்’ - வைரலாகும் பிரபல நடிகையின் கருத்து

மனச்சோர்வடைந்தாலோ அல்லது மனது அமைதியை விரும்பினாலோ, கல்லறைக்குச் செல்வதாக அவர் கூறினார்.
சென்னை,
நடிகை காமக்சி பாஸ்கர்லாவின் சமீபத்திய கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
காமக்சி தற்போது “12 எ ரெயில்வே காலனி” என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தற்போது அவர் இந்த படத்தின் புரமோஷன்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்திய புரமோஷனின்போது பேசிய அவர், சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். மனச்சோர்வடைந்தாலோ அல்லது மனது அமைதியை விரும்பினாலோ, கல்லறைக்குச் செல்வதாக அவர் கூறினார்.
கல்லறைக்குச் செல்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் கிடைப்பதாக காமாட்சி கூறினார். இந்தக் கருத்துக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Related Tags :
Next Story






