22 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க திரும்பிய இசையமைப்பாளர் தமன்


Thaman Comeback as an Actor after 22 Years
x

தமன் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ’பாய்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'பாய்ஸ்' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க திரும்பி இருக்கிறார் தமன். அதன்படி, அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தில் தமன் நடிக்கிறார். அவரே இசையும் அமைக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக மாறிய ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். பிரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story