

சென்னை,
மடோக் ஹாரர் காமெடி யுனிவர்ஸின் சமீபத்திய ஹாரர்-காமெடி படமான தம்மா, தீபாவளி ஸ்பெஷலாக நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்ஜ்யா படத்திற்கு பெயர் பெற்ற ஆதித்யா சர்போத்தார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தம்மா திரைப்படம் அதன் முதல் நாளில் இந்தியாவில் ரூ.25.11 கோடி வசூலித்துள்ளது.
இதன் மூலம், ஸ்ட்ரீ 2 க்குப் பிறகு, மடோக்கின் ஹாரர் காமெடி யுனிவர்ஸில் இரண்டாவது பெரிய தொடக்கத்தை பெற்ற படமாக தம்மா சாதனை படைத்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டில் அதிக ஓபனிங்கை பெற்ற பாலிவுட் படங்களின் பட்டியலிலும் தம்மா இடம்பிடித்துள்ளது.