ரிலீஸுக்கு முன்பே இந்த சாதனையை படைத்த 'தண்டேல்'


Thandel’s remarkable achievement ahead of release
x
தினத்தந்தி 4 Feb 2025 9:07 AM IST (Updated: 4 Feb 2025 9:09 AM IST)
t-max-icont-min-icon

'தண்டேல்' படம் வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. 'தண்டேல்' படம் வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே ஒரு மாபெரும் சாதனையை 'தண்டேல்' திரைப்படம் படைத்திருக்கிறது. அது என்னவென்றால், ஐஎம்டிபி வெளியிட்டுள்ள மிகவும் எதிர்பார்கப்படும் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலில் தண்டேல் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.


Next Story