'தண்டேல்' படத்தின் 3-வது பாடல் 'ஹைலேசோ ஹைலேசா'


Thandel’s third single Hilesso Hilessa to be unveiled shortly
x

சாய்பல்லவி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'.

சென்னை,

அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானநிலையில், 3-வது பாடலுக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி,'ஹைலேசோ ஹைலேசா' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை வெளியாக இருக்கிறது.

1 More update

Next Story