``உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி'' - அனுபமா பரமேஸ்வரன் நெகிழ்ச்சி


Thank you all for the immense love and appreciation
x

வெற்றிநடை போட்டுவரும் ’டிராகன்’ படத்தில் அனுபமா நடித்திருந்தார்.

சென்னை,

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரேமம்' படத்தில் அறிமுகமாகி தமிழில் 'கொடி', 'தள்ளிப்போகாதே', 'சைரன்' ஆகிய படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் 'டிராகன்' படத்தில் அனுபமா நடித்திருந்தார். இதில் அனுபமா, `கீர்த்தி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

'கீர்த்தி' கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை அனுபமா, ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி..'' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story