’ரவி தேஜாவின் அந்த படம் கார்த்தி கெரியரில் பெரிய திருப்புமுனையாக இருந்தது’ - சூர்யா


That Ravi Teja film was a big turning point in Karthis career - Suriya
x

மாஸ் ஜதாரா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துகொண்டார்.

ஐதராபாத்,

ரவி தேஜா -ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ் ஜதாரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபல எழுத்தாளர் பானு போகவரபு இப்படத்தை இயக்கியுள்ளார். நவீன் சந்திரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதற்கிடையில், ஐதராபாத்தில் நேற்று இப்படத்தின் பிரமாண்ட பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியது கவனம் பெற்றுள்ளது. அவர் கூறுகையில், ‘ரவி தேஜாவின் ரசிகனான எனக்கு இது ஒரு சிறந்த தருணம். ரவி தேஜாவின் படங்களுக்கு தமிழிலும் ஒரு அற்புதமான கிராஸ் இருக்கிறது. அவரின் விக்ரமகுடு ( சிறுத்தை) படம் கார்த்தியின் கெரியரில் ஒரு பெரிய திருப்புமுனை.

மாஸ் ஜதாரா சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் பானுவின் கனவு நனவாக வேண்டும். இந்த மாதம் 31 ஆம் தேதி மற்றொரு பிளாக்பஸ்டரைப் பார்க்கப் போகிறோம்" என்றார்.

1 More update

Next Story