’அது நான் எடுத்த மிக மோசமான முடிவு’ - நடிகை ஜோதி

நடிகை ஜோதி தெலுங்கு பிக் பாஸின் முதல் சீசனில் பங்கேற்றார்.
சென்னை,
ஒரு காலத்தில் திரைப்படங்களில் குணச்சித்திரக கதாபாத்திரங்களில் நடித்த ஜோதி, நீண்ட காலமாக சினிமாவில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவர் தெலுங்கு பிக் பாஸின் முதல் சீசனிலும் பங்கேற்றார். ஆனால், அவரால் பல வாரங்கள் தங்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‘நான் ஒரிசாவில் பிறந்தேன், விசாகப்பட்டினத்தில் வளர்ந்தேன். கதாநாயகியாக வேண்டும் என்று ஐதராபாத் வந்தேன். முதல் முறையாக ஒரு படத்திற்கான ஆடிசனுக்குச் சென்று தேர்வு செய்யப்பட்டேன். அப்படித்தான் நான் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தேன்.
ஒருவரை காதலித்தேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அந்த கோபத்தில், உடனடியாக வேறொருவரை மணந்தேன். அதுதான் நான் எடுந்த மிக மோசமான முடிவு. இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் விவாகரத்து பெற்றோம். அப்போதிருந்து நான் தனியாக இருக்கிறேன். மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஒரு நல்ல பையன் கிடைத்தால், திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.






