''சினிமாவிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு விஷயம்...'' - மனம் திறந்த சாய் மஞ்ச்ரேக்கர்


Thats what I learned from cinema - Sai Manjrekar
x
தினத்தந்தி 22 Aug 2025 7:09 PM IST (Updated: 22 Aug 2025 7:11 PM IST)
t-max-icont-min-icon

நடிகை சாய் மஞ்ச்ரேக்கர் தனது திரைப்படத் தேர்வுகளை பற்றி பகிர்ந்தார்.

சென்னை,

சல்மான் கான் நடிப்பில் வெளியான 'தபாங் 3' மூலம் திரைத்துறையில் அறிமுகமான சாய் மஞ்ச்ரேக்கர், தெலுங்கில் 'கனி', 'மேஜர்', 'ஸ்கண்டா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சாய் மஞ்ச்ரேக்கர் தனது திரைப்படத் தேர்வுகளை பற்றி தெரிவித்தார். அதிகப்படியான படங்களில் நடிப்பதை விட சரியான படங்களில் நடிப்பதையே முக்கியமாகக் கருதுவதாக கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “நான் மிகவும் இளம் வயதில் சினிமாவில் பணியாற்றத் தொடங்கினேன். அதிலிருந்து நான் ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன். அது என்னவென்றால், பல படங்களில் நடிப்பதைவிட, சரியான படங்களை தேர்வுசெய்வதுதான் முக்கியம். பிஸியாக இருக்கவேண்டும் என்பதற்காக பல படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. எனக்கு சவாலான கதாபாத்திரங்கள், ஒரு நடிகையாக வளர உதவும் படங்களில் பணியாற்ற விரும்புகிறேன்" என்றார்.

சாய் மஞ்ச்ரேக்கர் கடைசியாக அஜய் தேவ்கன் மற்றும் தபு நடிப்பில் வெளியான 'ஔரோன் மே கஹான் தும் தா' என்ற இந்தி திரைப்படத்தில், தபுவின் இளம் இளம்வயது கதாபாத்திரத்தின் நடித்தார். மேலும், சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘அர்ஜுன் சன் ஆப் வைஜயந்தி’யிலும் சாய் மஞ்ச்ரேக்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

1 More update

Next Story