’அதனால்தான் என் பெயரை மாற்றினேன்’ - கியாரா அத்வானி

கியாரா என்று தனது பெயரை மாற்ற காரணம் என்ன என்பதை ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார்.
'That's why I changed my name' - Kiara Advani
Published on

சென்னை,

திரையுலகில் நடிகையாக பெயர் எடுக்க பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். தங்கள் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கி, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டவர்களே நட்சத்திரங்களாகிறார்கள்.

கியாரா அத்வானியும் அதில் ஒருவர்தான், தனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் சந்தித்த கஷ்டங்களால் தனது பெயரை மாற்றிக்கொண்டார். தற்போது அவர் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இருக்கிறார்.

இதற்கிடையில், கியாரா என்று தனது பெயரை மாற்ற காரணம் என்ன என்பதை ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். அவர் கூறுகையில், அஞ்சனா அஞ்சனி படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரமான கியாரா என்னை ஈர்த்தது. ஆரம்பத்தில், என் மகளுக்கு அந்த பெயரை வைக்க விரும்பினேன். ஆனால் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில், என் பெயரை மாற்றுவது முக்கியம் என்று உணர்ந்தேன். எனவே, நான் என் பெயரை கியாரா அத்வானி என்று மாற்றிக்கொண்டேன் என்றார்

கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா அத்வானி ஆகும். தற்போது கியாரா, யாஷுடன் டாக்சிக் படத்தில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com