'குபேரா' படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்


குபேரா படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்
x
தினத்தந்தி 28 May 2025 4:21 PM IST (Updated: 7 Jun 2025 11:50 AM IST)
t-max-icont-min-icon

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், தனுஷின் குபேரா முழு படத்தையும் பார்த்த பிரபல விநியோகஸ்தர் ராகுல், படத்திற்கு முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சேகர்கமுல்லா சாரின் குபேரா படத்தைப் பார்க்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் குபேரா முழு படத்தையும் பார்த்த விநியோகஸ்தர் ராகுல் தற்போது ட்விட்டரில் படத்தின் முதல் விமர்சனத்தை கூறி இருக்கிறார். நடிப்பு முதல் திரைக்கதை நாடகம் வரை அனைத்தும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், தீவிரமாகவும் இருந்தன. தனுஷுக்கு இது இன்னொரு பிளாக்பஸ்டர் படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story