கல்யாண வீட்டில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு நேர்ந்த கதி - பெரிய சிக்கலில் துல்கர் சல்மான்

அரிசி நிறுவனத்தின் விளம்பர தூதரான துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவனந்தபுரம்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். இவர் கேரளாவை சேர்ந்த ஒரு பிரியாணி அரசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராக உள்ளார். இந்த நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் நுகர்வோர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கின் மனுவின், "கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தின் பிரியாணி அரிசியை வாங்கினோம். அதில் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து அந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர தூதரான நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்த நுகர்வோர் ஆணையம் வருகிற டிசம்பர் 3ம் தேதி அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.






