பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

"டிக்யூ 41" படக்குழு நடிகை பூஜா ஹெக்டேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 'முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ' ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது விஜய்யின் "ஜனநாயகன்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து, பிரமாண்டமாக உருவாகவுள்ள துல்கர் சல்மானின் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக "டிக்யூ 41" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், "டிக்யூ 41" படக்குழு நடிகை பூஜா ஹெக்டேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story






