’மண், மக்கள், மரியாதை, வீரம் நான்கும் பேசும் "வடம்"’ - பர்ஸ்ட் லுக் வெளியீடு

இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் "வடம்" என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு கதைக்களத்தில் உருவாகி வரும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ள இதில், ’மண், மக்கள், மரியாதை வீரம் நான்கும் பேசும் "வடம்"’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






