ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட்டிற்கு தள்ளிப்போன 'அனுமான்' நடிகரின் படம்


The Hanuman actors next film postponed from April to August
x

’அனுமான்’ படத்தையடுத்து தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் படம் ‘மிராய்’.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தேஜா சஜ்ஜா. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'சாம்பி ரெட்டி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், பிரசாந்த வர்மா இயக்கத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான 'ஹனுமான் படத்தின் மூலம் பிரபலமானார்.

அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார்,சமுத்திரக்கனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் படம் 'மிராய்'.

பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸை ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றியுள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி 'மிராய்' வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழுவினர், உலகளவில் எட்டு மொழிகளில் படம் 2டி மற்றும் 3டி முறையில் திரையிடப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

1 More update

Next Story