’இணையம் இனி உண்மையின் பிரதிபலிப்பு அல்ல’ - வைரலாகும் ராஷ்மிகாவின் பதிவு


the internet is no longer a mirror of truth - rashmika mamndana
x

செயற்கை நுண்ணறிவு குறித்து ராஷ்மிகா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு குறித்து ராஷ்மிகா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ''செயற்கை நுண்ணறிவு (AI) மனித முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி. ஆனால் அதை பெண்களுக்கு எதிராக சிலர் பயன்படுத்துகிறார்கள். இணையம் இனி உண்மையின் பிரதிபலிப்பு அல்ல; அது எதையும் கற்பனை செய்து உருவாக்கக்கூடிய ஓர் ஓவியப் பலகை.

ஏஐயை முன்னேற்றமான சமுதாயம் உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். பொறுப்பைத் தேர்வுசெய்யுங்கள்; பொறுப்பில்லாத தன்மையை அல்ல. மனிதர்களாக நடக்க முடியாதவர்கள் கடுமையான மற்றும் மன்னிப்பில்லாத தண்டனையைச் சந்திக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story