'தி ராஜா சாப்': பிரபாஸின் தாத்தாவாக சஞ்சய் தத் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்


The Raja Saab: First Look of Sanjay Dutt’s Character Unveiled
x

இந்த ஹாரர் காமெடி படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

சென்னை,

''கல்கி 2898 ஏடி'' படத்தையடுத்து பிரபாஸின் அடுத்த பெரிய படமாக 'தி ராஜா சாப்' உருவாகி வருகிறது. மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் பிரபாஸின் தாத்தாவாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் வயதான அதிகமாக வளர்ந்த முடி மற்றும் மீசையுடன் காணப்படுகிறார்.

இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் டிசம்பர் 5 அன்று பல மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் இவர்களை தவிர்த்து, போமன் இரானி, விடிவி கணேஷ், சப்தகிரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story